Tuesday, September 06, 2005


சிதம்பர நடராஜர்

அண்ட சராசரம்

கண்டு நடுங்கிட,
தாண்டவம் ஆடும்
ஆண்டவனே !

பிண்டம் இதில்வந்து,

தண்டம் பெறுகின்ற,
கண்டம் நீக்கும்அருள்

கொண்ட நாயகனே!

பாபம் பொடிந்துவிட,

கோபம் களைந்துவிட,
காமம் கடந்துவிட,

நாமும் செயவேண்டியதே,
நடராஜர் எனும்
நாமம் சொலவேண்டியதே !!

முற்றித் தெறித்துவிடும் பக்தரைப்
பற்றித் தொடர்ந்திடும் பாபத்தை

நெற்றிக் கண்திறந்து எரித்துக்
கொற்றப் பேரரசு செயும்
பற்றற்ற ருத்திரனே !!

கணக்கற்றுச் செய்த குற்றத்தால்

சுற்றம் யாவும் இழ‌ந்திட்டு
திக்கற்றுத் திரியும் நாயேன்நான்,
பற்றற்ற நாதனுன் பாதத்தைப்
பற்றித் தெளிந்து எரிந்துவிடும்
முக்திப் பெரும் பேறதனைப்
பெற்றுக் கரைய மாட்டேனோ?

ஸ்ரீ சித்சபேஸாய மங்களம் !


1 Comments:

Anonymous Anonymous said...

hi chezhian,
U r going for recreation therapy .
thats gud 2 remember the past
great

By
R.karthikeyan.

7:31 AM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home