கல்லூரிக் காலங்கள்
அன்பால் அறிமுகமாகி,
இனிய பண்பால்பழகி,
இன்று நண்பர்களாகிவிட்டநிலையில்,
நாம் நனைந்த,
ஆனந்த நினைவுகள் சில !
காலையில் சாப்பிடாமல்வந்து,
கல்லூரிக் கேன்டீனுக்கு,
க்ளாஸ்ப்ரேக்கில் சென்று,
ப்ரேக்ஃபாஸ்ட்டை முடித்த,
பேச்சலர் நினைவுகள் !
ஹாஸ்டலுக்கு செல்லும்முன்பு,
அடிதடியாய் அடுத்தவர்களின்,
டிஃபன்பாக்ஸைத் தீர்த்த,
திகட்டாத நினைவுகள் !
ட்ரீட் என்றும்,
ஸேம்ஸ்யூட் என்றும்,
பேக்கட்மனிக்கு ஹீட்கொடுத்த
ஹிஸ்ட்டாரிக் நினைவுகள் !
துள்ளலும் லொள்ளலும்
வெள்ளமாய்ப் பொங்க,
நக்கலும் கிண்டல்களில்சிக்கலும்
உள்ளமாய்த் தங்க,
ஆகாயம் தொடும்
ஆனந்தசிறகடிப்புகள் அணிதிரண்ட
ஐ.வி-யின் நினைவுகள்!!
கல்லூரித் திருவிழாக்களில்,
கலைவிருந்து படைத்த,
கற்பூர நினைவுகள்!!
கன்னியரின் கடைக்கண்பார்வையால்,
மனதில் காதல்மிகு
சாரல்கள் அடித்த,
கலங்காத நினைவுகள்!!
கண நேரமாவது,
காரணமில்லாமல் பயிர்விக்கப்படும்
கல்லூரிக் கடலைகள்!
அதிலும் ஓட்டுதல்கள்-எனும்பெயரில்
ஓடிவரும் களைகள்!
இத்தனையையும் மீறி,
அத்தனை கடலைகளையும்,
சித்தமுடன் வறுத்து,
பரிசுத்தமாகப் பக்குவப்படுத்தும்,
கலக்கல் நினைவுகள்!!
கணிப்பொறியின் டெஸ்க்டாப்களில்மட்டுமின்றி,
கல்லூரி வகுப்புக்களில்
தினம் அமரும் டெஸ்க்டாப்களிலும்,
காவியத்தைப் பொறித்த,
கலையாத நினைவுகள்!!
நண்பர்களின் இல்லங்களுக்கு,
அன்போடு சென்று,
இன்பத்தில் இடம்பிடித்த,
இனிமையான நினைவுகள்!!
இன்பத்தில் மட்டுமின்றி,
துன்பத்திலும் துணைவரும்,
தூய்மையான நினைவுகள்!!
இவை -
மேற்கத்திய நாடுகளில்,
மேற்படிப்பே கிடைத்தாலும்,
மேற்கொண்டு கிடைக்காத,
மேலான நினைவுகள்!!
நினைவுகளோடு நினைவுகளாய்,
இந்த நிலையற்றவாழ்வில்,
பிரிவென்ற நிலையில்,
நிற்கும்போதும் தொடரும்,
நீங்காத நினைவுகள்!!
நண்பர்தின வாழ்த்துபோன்ற,
நல்லதொரு தலைப்பில்,
நட்பென்ற பேனாவில்,
நண்பனென்ற புனைப்பெயரில்,
நானெழுதும் கவிதையின் இந்த
நான்காமாண்டுக் காவியத்தில்,
கண்ணீரை மையாக்கி,
கவிதோன்றும் இதயத்தைக்கல்லாக்கி,
அரும்புகின்ற நீரோடு,
அனைவரும் விரும்புகின்ற
வாழ்வுபெற்று வியப்புறவாழ்கவென,
ஆண்டவனை வேண்டி,
அடுத்தாண்டு இத்தினத்தில்-உங்கள்
அனைவரையும் காணமுடியாதென்ற
அளவற்ற ஆதங்கத்தோடும், இந்த
அன்பான நினைவுகளோடும்-என்
அத்தியாயத்தை முடிக்கின்றேன்,
ஆயுளுக்கும் இந்த,
நண்பனின் நல்வாழ்த்துக்கள் !!

